அந்த ஒரு நொடி பொழுது, மறக்க முடியவில்லையடா!
உன்னை விட்டு பிரிந்த அந்த ஒரு நொடி பொழுது மறக்க முடியவில்லையடா!
கண்களில் எவ்வளவு அடக்கியும் பெருகும் நீருடன் அந்த ஒரு நொடி பொழுது மறக்க முடியவில்லையடா!
தெரியும் இதுதான் உன் வளமான எதிர்காலத்துக்கான வித்து என்று, இருந்தும் அந்த ஒரு நொடி பொழுது மறக்க முடியவில்லையடா!
எங்கள் குருவின் மடியில் தான் தவழ போகிறாய், இருப்பினும் அந்த ஒரு நொடி பொழுது மறக்க முடியவில்லையடா!
அந்த சக்தி பீடத்தில் தான் வலம் வர போகிறாய், ஆனாலும், அந்த ஒரு நொடி பொழுது மறக்க முடியவில்லையடா!
என்னுள் இருந்த தாய்மையை நான் முழுவதும் உணர்ந்த அந்த ஒரு நொடி பொழுது மறக்க முடியவில்லையடா!
என் கண்ணே என் வாழ்நாளில் இந்த ஒரு நொடி பொழுதை எனக்கு அளித்தமைக்கு என் நன்றியடா!
(கண்களில் பெருகும் நீருடன்...)