புதன், 21 செப்டம்பர், 2011

பித்தா பிறை சூடி...

மூன்று மாதங்களுக்கு மேலாக ஓடி விட்டது!
பௌர்ணமி போல் இருந்த உன் நினைப்பு தேய் பிறையாக மாறி விட்டது!
ஆனால் இரண்டு வாரமாய்  வளர் பிறை!
இன்றோ நண்பகலில் சுட்டெரிக்கும் சூரியனுக்கு நடுவிலும் முழு மதி!
காரணம் உன் பிறந்த நாள்!
பௌர்ணமியின் கடல் அலைகள் போல் என் மனதில் உன் நினைவலைகள்! 
பஞ்சாம்ரிதம் போன்ற உன் குரலை கேட்டவுடன் தான் கரை சேர்ந்தது என் மனதின் அலைகள்!
மீண்டும் தேய் பிறை தானோ? 
பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா!