சனி, 16 ஆகஸ்ட், 2008

இஷா யோகா - வாழ்க்கை புரிதல்

நெடு நாட்களாக என் மனதில் ஒரு வெறுமை குடி கொண்டு இருந்தது.வாழ்க்கையில் உண்மையான நாட்டம் குறைந்தே காணப்பட்டது.என் மகள் பிறந்ததும் சிறிது அதிகமானது என்னவோ உண்மை. இருப்பினும் வெறுமையே வென்றது. அதனால் உண்டான தேடலில் நிறைய படிக்க ஆரம்பித்தேன் - கண்டிப்பாக டெக்னிகல் விஷயங்கள் இல்லை:-) முற்றிலும் ஆன்மிக விஷயங்கள் தான். படித்து குழம்பி தெளிந்து மீண்டும் குழம்பியதில் சில - Gospel of Sri ramakrishna, bhagavad gita, selections from the complete works of vivekananda, Can humanity change? - J.Krishnamurthi, An end to suffering - pankaj mishra.இவை எல்லாவற்றிலும் நான் நிறைய கற்றாலும் கூட, என் வெறுமை என்னவோ வழக்கம் போல் என்னை பார்த்து சிரித்தது. நாத்திக புத்தகங்களும் சிறிது படித்து குழம்பினேன். ஆனால் சத்குரு ஜக்கி அவர்களின் "ஞானியின் சந்நிதியில்" படித்தது மனதிற்கு ஒரு ஆறுதலாக இருந்தது. அவற்றில் சிலவற்றை அனுபவபூர்வமாக உணர்ந்ததும் தான் சத்குருவின் மேல் மிகுந்த மரியாதை பிறந்தது.பின்னர் என் தம்பியின் மூலம் இஷா யோகாவின் 13 நாட்கள் "சக்தி சலன கிரியா" வகுப்பில் சேர்ந்தேன். என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கிடைத்தது போல் உணர்ந்தேன். நாட்பட நாட்பட, நான் தினமும் யோகா செய்ய செய்ய, அந்த எண்ணம் மிகவும் வலுபெற்றது. என் உடல் மற்றும் மனம் என் கட்டுக்குள் சிறிது சிறுதாக வந்துகொண்டுஇருக்கிறது(இந்த பயணம் எளிதில் முடியாது).
வார்த்தைகள் is a poor substitute for the actual experience. ஆதலால் ஒவ்வருவரும் இதை அனுபவபூர்வமாக பெற இஷா யோகாவின் 7 நாள் வகுப்பில் சேர கேட்டுக்கொள்கிறேன். http://www.ishafoundation.org/Schedule/Isha-Yoga-Programs.isa இணைய தளத்தில் எல்லா விவரங்களும் உள்ளது.

Believe me, this is a gr8 oppurtunity to experience life.

அன்புடன்,
TR (எ) ராம்கி.

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

Today I read all your blogs (from Jan 08 to Aug 08). Its interesting to see how we can express our minds just like the college days chats.

In all the threads i was able to connect with your thoughts.

My parents and sisters family in india are going to Isha yoga and hoping to see the difference.

Vaidy சொன்னது…

Very true... ISHA has helped me turn humane.... I join my bro in requesting everyone to make use of this wonderful opportunity...It is high time humanity starts realizing themselves...