உன்னை முதன் முதலாய் பார்த்தது நினைவு இருக்கிறது ஒற்றை கண்ணா.
இரண்டு கண்ணோடு உன் நண்பன் உணவை கண்டு பிடிக்க ஸ்ரமபட்டதும் நினைவிருக்கிறது.
ஒற்றை கண்ணோடு நீ என்ன செய்ய போகிறாய் என எண்ணியதும் நினைவிருக்கிறது.
ஆனால் உன் நண்பன் முதல் எல்லோரையும் வழி அனுப்பிவிட்டு தனிகாட்டு ராஜாவாக(ராணியாக?) பவனி வந்தாய்.
உனக்கும் எனக்கும் அந்த உணவு தானே ஒரு பந்தம்!
காலையில் அவசரமாய் போகையிலும் மாலையில் களைப்பாய் வருகையிலும் உனக்கு 5 அ 6 உருண்டைகள்!
நான் உண்ணும் முன் நீ உண்ணுவதே நான் சொல்லாத விதி .
அதனால் தானோ வெறும் மீன் தானே என்று எண்ண முடியவில்லையோ?
அதனால் தானோ ஏதோ ஒன்று குறைவது போல் உள்ளதோ?
பி.கு: எங்கள் கடைசி மீன் - ஒற்றை கண் cat fish இறந்து சில வாரங்கள் ஓடி விட்டது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக